ஸ்ப்ரே தடுப்பூசி மருந்து 99.9% கொரொனா வைரஸை கொல்லும்..!
கனடா நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்ப்ரே தடுப்பூசி மருந்து 99.9% கொரொனா வைரஸை கொல்லும் செயல் திறன் வாய்ந்தது என பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அந்தநாட்டின் சானடைஸ் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கியுள்ள நைட்ரிக் ஆக்சைடு நேசல் ஸ்ப்ரே மருந்து இரண்டாம் கட்ட சோதனையில் உள்ளது.
நைட்ரிக் ஆக்சைடை அடிப்படையாகக் கொண்ட இந்த மருந்தை மூக்கினுள் ஸ்ப்ரே செய்தால் கொரொனா வைரஸ் நுரையீரலுக்குள் செல்வ தற்கு முன்பாக அவற்றை அழித்து விடுவதாக அமெரிக்காவின் புட்டா மாநில பல்கலைக்கழகத்தின் ஆன்ட்டி வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் நடந்த பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.







