பாகிஸ்தான் தோண்டியுள்ள 150 மீட்டர் சுரங்கம்..!
பயங்கரவாதிகளின் ஊடுருவல் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் கண்டறிந்துள்ளது. குத்து வா அருகே உள்ள தோண்டப்பட்ட அந்த சுரங்கம் 150மீட்டர் நீளத்திற்கு உள்ளதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு ஜூன் மாதம் இந்தப்பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா குட்டி விமானம் ஒன்றை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். அதே இடத்தில் இப்போது சுரங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சுரங்கத்தின் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ வைத்து பாகிஸ்தான் ஆயுதங்களை வழங்கி வருவதாக பாதுகாப்பு படை கூறியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் நான்கு சுரங்களை கண்டறிந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.







