--- --:--:-- --

உதவி பேராசிரியர் பணிக்கு பிஎச்டி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்..!

7

தவி பேராசிரியர் பணிக்கு பிஎச்டி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில் முதுகலை மற்றும் எம்பில் பட்டம் பெற்று பின்னர்செட், நெட் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று கிராமப்புற மாணவர்களை உதவி பேராசிரியர் பணி வாய்ப்புக்கு போராடி வருகிறார்கள் என கூறியிருக்கிறார்.

 

இந்நிலையில் பிஎச்டி ஆய்வு படிப்பை முடித்தால் மட்டுமே உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என தகுதி நிர்ணயித்திருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது எனக் குறிப்பிட்டுள்ளார். சமூக நீதியை பறிக்கும் இந்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon