இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக கூறிய கணவனை கொலை செய்த மனைவி..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக கூறிய கணவனை மனைவியே அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.
லாயன்மில் காலனியை சேர்ந்த பிரபுவிற்கு உமாமகேஸ்வரி என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த பிறகு மனைவியுடன் தகாத உறவு வைத்திருக்கும் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக போதையில் கூறி சண்டை போட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பிரபுவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.






