--- --:--:-- --

பொதுத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள அனுமதி..!

5

பொதுத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள அரசு தேர்வு இயக்ககத்திற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரொனா பரவலுக்குப் பின்னர் கடந்த 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன.

 

நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் பொது தேர்வுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள அரசு துறைத்தேர்வுகள் இயக்கத்திற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களின் விபரங்களை பள்ளிக்கு நேரில் வரவழைத்து பெறலாம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. பொதுத் தேர்வு நடத்துவதற்காக பள்ளிகளிலும் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon