--- --:--:-- --

சசிகலா வருகைக்குப்பின்பும் இ‌பி‌எஸ்,ஓ‌பி‌எஸ் ஆட்சியே தொடரும்..!

18

சிகலா வருகைக்குப்பின் அதிமுக ஆட்சிதான் தொடரும் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலையொட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றும் நாளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்கிறார்.

 

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து உத்தரவிட்ட எடப்பாடி பழனிசாமி ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் பரப்புரையை தொடங்கியுள்ளார். பேசியவர் அதிமுக அரசை மு க ஸ்டாலின் வேண்டுமென்றே குறை கூறுவதாக பேசினார்.

 

ஆட்சி கவிழும் என ஸ்டாலின் கண்ட கனவு பலிக்க வில்லை எனவும் பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு கொடுக்க வேண்டுமெனவும் மக்கள் மத்தியில் முதல்வர் பேசியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon