மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியருக்கு விருது..!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் சத்தியமூர்த்தி தமிழக அரசின் தமிழ்ச் சங்க விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் அறிஞர்கள் , தமிழ் அமைப்பை ஏற்படுத்தி பிற நாடுகள் மாநிலங்களில் தமிழ் பண்பாடு கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கு மாவட்டத்தில் ஒருவருக்கு தமிழக அரசு இந்த விருதை வழங்குகிறது.
இந்த வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் சத்தியமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 45 க்கும் மேல் தமிழ் இலக்கிய நூல்களை பதிப்பாக்கம் செய்துள்ளார்.
10 தமிழ் ஆய்வு நூல்கள் எழுதியுள்ளார். 75க்கும் மேல் சர்வதேச தேசிய கருத்தரங்குகளில் தமிழ்மொழி சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.







