--- --:--:-- --

தமிழக முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசவுள்ளார்..!

1

டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேச உள்ளார். டெல்லி லோக்கல்யான் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ உள்ளது. தமிழகத்திற்கான அரசு திட்டங்கள் குறித்து பேசும் முதல்வர் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்தும் பேசுவார் என தெரிகிறது.

 

இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதலமைச்சர் சந்தித்து பேசவுள்ளார். அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உடன் இருந்துள்ளார்.

 

சுமார் ஒன்றேகால் மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் தமிழகத்தில் பருவம் தவறிய மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் கொரொனா தடுப்பூசி திட்டம் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

 

மேலும் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் முதலமைச்சரின் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon