ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற இந்திய ரயில்வே பொறியாளர் கைது..!
ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாக இந்திய ரயில்வேயின் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய ரயில்வே பொறியாளர் சேவை பிரிவின் மூத்த அதிகாரியான மகேந்திர சிங் சவுகான் வடகிழக்கு எல்லை காண்ட்ராக்ட் பணிகள் ஒரு ஏஜென்சிக்கு கிடைக்க லஞ்சம் பெற்றதாக சிபிஐக்கு தகவல் கிடைத்தது.
அவர் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக வந்த புகாரை அடுத்த சிபிஐ போலீசார் வடகிழக்கு ல்எலை ரயில்வேயின் தலைமையகம் அமைந்துள்ள அசாமின் மாலிக்கன் மற்றும் டெல்லி உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மொத்தம் 20 இடங்களில் சோதனை செய்த லஞ்ச பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர்.
அதனை தொடர்ந்து மகேந்திர சிங் சவுகான் கைது செய்யப்பட்டுள்ளார்.







