லடாக் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய, சீன டாங்கிகள்..!
லடாக் பிராந்தியத்தில் இந்திய, சீன வீரர்கள் 100 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் டாங்கிகளை நிறுத்தியுள்ள படம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சீன இணையதளமான வைபோ மற்றும் சமூக ஊடகங்களில் அந்நாட்டு ராணுவத்தில் உள்ள ஒருவரே பதிவிட்டுள்ளார்.
இதில் சர்ச்சைக்குரிய பகுதியில் இந்திய சீன டேங்குகள் ஒன்றுக்கொன்று எதிர் எதிரே நிறுத்தப்பட்டுள்ளன. அங்கொன்றும் இங்கொன்றுமாக சீன ராணுவம் அதற்கு நேர் எதிராக இந்திய ராணுவம் இருப்பது அந்த படத்தில் தெரியவந்துள்ளது.
இவை அனைத்தும் அதிகபட்சம் 94 மீட்டர் தூரத்திற்குள் ஆகவே நிறுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இந்திய சார்பில் டி70 மற்றும் டி90 வகையான டேங்குகள் சீனா சார்பில் 15 வகையான டேங்குகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த படத்தின் மூலம் தெரியவந்துள்ளது.







