--- --:--:-- --

முதியவர்களுக்கு வீடு தேடி வரும் இலவச மருந்து திட்டம்..!

4

கேரளாவில் முதியவர்களுக்கு வீடு தேடி வரும் இலவச மருந்து திட்டம் என்பது உள்ளிட்ட புதிய திட்டங்கள் அந்த மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கடந்த 8ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில நிதி அமைச்சர் தாமஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

 

கேரள வரலாற்றிலேயே அதிக பட்சமாக மூன்று மணி நேரம் 17 நிமிடங்கள் அவர் பட்ஜெட் உரையை வாசித்துள்ளார்.

 

20 லட்சம் பேருக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு, 166 கோடி ரூபாயில் வீடுகள் தோறும் இன்டர்நெட் வசதிக்காக திட்டம், பல்கலைக்கழகங்களில் உள் கட்டமைப்பு வசதிகள் 2,000 கோடி ரூபாய், வீடுகள்தோறும் மடிக்கணினி, முதியவர்களுக்கு இலவச மருந்துகள் வீடு தேடி வரும் திட்டம் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு மக்களையும் வாக்காளர்களையும் ஏமாற்றும் பட்ஜெட் என்று எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon