போகிப் பண்டிகையின் போது ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம்..!
டயர், ரப்பர் பிளாஸ்டிக் பொருட்களை போகி பண்டிகையின் போது எரிக்க வேண்டாம் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் எல்இடி விழிப்புணர்வு வாகனங்களை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் தொடக்கி வைத்துள்ளார்.
போகி பண்டிகையின் போது தேவையற்ற பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதால் டயர் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் தேவையற்ற பொருட்களை எரிக்காமல் இருக்க சென்னையில் 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.






