--- --:--:-- --

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

10

லங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

 

நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை வரையும், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

 

ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon