--- --:--:-- --

மானாமதுரை நீதிமன்றம் எதிரே இரு இளைஞர்களுக்கு சாரமாரி வெட்டு ஒருவர் பலி

14

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நீதிமன்ற வாசல் எதிரே பேசி கொண்டு இருந்த இளைஞர்களை ஒரு கும்பல் வெட்டிவிட்டு தப்பியது.

 

மானாமதுரை அருகே வேலூர் கிராமத்தை சேர்ந்த வினோத் கண்ணன், சிவகங்கையை சேர்ந்த அருள் நாதன் என்ற மைனர் மணி இருவரும் மானாமதுரை உரிமையில் நீதிமன்றம் எதிரே பேசி கொண்டு இருந்த போது நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டி தப்பியது ரோட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அருள் நாதன்( 28) மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மற்றொரு இளைஞரான வினோத் கண்ணன் (29) சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரைக்கு கொண்டு செல்லபட்டார். இருவரும் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மானாமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon