சூதாட்டத்தால் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!
சூதாட்டத்தில் சுமார் 7 இலட்சம் ரூபாய் பணத்தை இழந்த இளைஞர் மனவேதனையில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரெட்ரிக் என்பவர் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பிரெட்ரிக் இணையதள சூதாட்டத்தில் ஆர்வமாக விளையாடி வந்த நிலையில் தொடர்ந்து பணத்தை இழந்து வந்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்த பிறகும் விளையாட்டை தொடர்ந்து வந்த அவர் கடந்த 4ஆம் தேதி வரை 7 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயை இழந்து இருப்பதாக தெரிய வருகிறது.
இதனால் மனமுடைந்த பிரெட்ரிக் திருப்பூர் வஞ்சிபாளையம் இடையே உள்ள தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த நிலையில் அவரது அடையாளம் தெரியாமல் இருந்து வந்தது.
ஏற்கனவே பிரெட்ரிக்கை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இறந்தவருடன் புகைப்படம் ஒத்துப் போனதால் இறந்தது அவர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.






