பேஸ்புக் காதலி கல்யாணத்திற்கு நோ சொன்னதால் இளைஞர் தற்கொலை..!
லவ் பண்ற தோட நிறுத்திக்கணும் கல்யாணம் அப்படி இப்படின்னு வரக்கூடாது என்று பேஸ்புக் காதலி கூறிவிட்டதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணா. அதில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் இவர் வேலை செய்து வந்துள்ளார்.
பேஸ்புக்கில் அறிமுகமான பெண் ஒருவரை கடந்த நான்கு மாதங்களாக ஹரிகிருஷ்ணா காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணும் ஹரி கிருஷ்ணாவின் காதலை ஏற்றுக் கொண்டு பதிலுக்கு பேஸ்புக்கில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் நேரில் ஒருமுறை கூட சந்தித்தது இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தனது காதலியிடம் ஹரி கிருஷ்ணா திருமண பேச்சை எடுத்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வது தொடர்பாக தனது காதலியின் பெற்றோர் இடத்தில் வந்து பேசுவதாகவும் ஹரிகிருஷ்ணா கூறியிருக்கிறார். ஆனால் அந்தப் பெண்ணோ ஹரி கிருஷ்ணாவுக்கு கழுவுற மீனில் நழுவுற மீனாக பதில் கூறி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் ஹரிகிருஷ்ணா நச்சரித்ததால் லவ் பண்றதோட நிறுத்திக்கணும் கல்யாணம் பேச்செல்லாம் எடுக்கக்கூடாது என்று காதலி கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த சில தினங்களாக மனமு.டைந்த நிலையில் ஹரிகிருஷ்ணா இருந்துள்ளார்.
இந்த நிலையில் தான் பணிபுரிந்த நிறுவனத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார் தகவல் அறிந்து வந்த போலீசார் கிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.






