உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள எலான் மஸ்க்..!
உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனரை பின்னுக்குத்தள்ளி முதல்முறையாக டெஸ்லா மற்றும் ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் முதலிடம் பிடித்துள்ளார்.
டெஸ்லா எலக்ட்ரிக் கார் பங்குகளின் விலையில் ஏற்பட்ட அபரிமிதமான உயர்வு இதற்கு காரணம் என தரவரிசையை வெளியிட்டுள்ள ப்ளூம்பெர்க் மில்லியனர்கள் இண்டேக்ஸ் தெரிவித்துள்ளது. எலான் மஸ்க்கின் நிகர மதிப்பு 188.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்த அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் வெசோசை முந்தியுள்ளார். அவரை விட எலான்மஸ்க் சொத்து மதிப்பு 1.5 பில்லியன் அதிகமாகும்.
இவரது டெஸ்லாவின் முன்பின் பங்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதி வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது. கடந்தாண்டு மட்டும் டெஸ்லாவின் பங்கு 740 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.







