போட்டோ ஷூட்டின் போது தவறி விழுந்த பிரபல நடிகை..!
போட்டோ ஷூட் எடுக்க முயன்ற பிரபல நடிகை ஹனிரோஸ் கால் தவறி ஆற்றில் விழுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளாவை சேர்ந்த இவர் தமிழில் சிங்கம்புலி, முதல்கனவே, மல்லுக்கட்டு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் கேரளாவில் உள்ள ஒரு ஆற்றங்கரையோரத்தில் போட்டோ ஷூட் எடுப்பதற்காக சேலை அணிந்து சென்ற போது கால் தவறி ஆற்றில் விழுந்துள்ளார். அங்கிருந்த படக்குழுவினரும் மேக் அப் மேன்களும் உடனடியாக அவரை பத்திரமாக மீட்டுள்ளனர்.







