ஹேம்நாத்தின் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவு..!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத்தின் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

 

இது தொடர்பாக நசரத்பேட்டை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திய நிலையில் அவரது கணவர் டிசம்பர் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

அதில் தனக்கும் சித்ராவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று சந்தேகப்பட்டதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் பொய் குற்றச்சாட்டு கூறுவதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வழக்கு மாற்றப்பட்டிருக்கும் மத்திய குற்றப்பிரிவினரையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

 


Leave a Reply