--- --:--:-- --

அதிமுக அரசு மீண்டும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும்..!

24

திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே கச்சேரி மேட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பவானி ஆற்றின் குறுக்கே 80 கோடியில் ஏழு தடுப்பணைகள் கட்ட பிப்ரவரி முதல் வாரத்தில் அடிக்கல் நாட்டப்படும் என தெரிவித்தார்.

 

அத்திக்கடவு அவினாசி திட்டம் விரைவில் விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் உறுதியளித்தார். அமைச்சர்கள் மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் நேருக்கு நேர் விவாதத்துக்கு தயாரா என்று முதலமைச்சர் பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

 

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக தெரிவித்தார். மக்களை பற்றி சிந்திக்கும் கட்சி அதிமுக என்றும், குடும்பத்திற்காக உழைக்கும் கட்சி திமுக எனவும் கூறினார்.

 

நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் உழைப்பை திமுக வெற்றி பெற்றது என்றும் இனி அது நடக்காது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon