தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, தேனி, திண்டுக்கல், கோவை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக நேற்று காலை எட்டரை மணி முதல் இரவு 11 30 மணி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் 20 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
நேற்று காலை முதல் இரவு பத்தரை மணி வரை கோவையில் 6 சென்டி மீட்டரும், கடலூர் மாவட்டம் லால்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில், சென்னை மீனம்பாக்கம் பகுதிகளில் தலா நான்கு சென்டிமீட்டர் மழை பொழிந்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







