--- --:--:-- --

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கான தேதிகள் அறிவிப்பு..!

9

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் அலங்காநல்லூர் மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றவையாகும். தமிழகத்தின் முக்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

அதன்படி ஜனவரி 14ஆம் தேதிக்கு அவனியாபுரத்தில், ஜனவரி 15ஆம் தேதி பாலமேட்டில், ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

மேலும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon