--- --:--:-- --

படத்தயாரிப்பாளர் கே.பி பிலிம்ஸ் பாலு உடல்நலக்குறைவால் காலமானார்..!

5

சின்னத்தம்பி படத்தின் தயாரிப்பாளரான கே.பி பிலிம்ஸ் பாலு உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவில் 1989ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளியான பிக்பாக்கெட் படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் கே பாலு.

 

இதன்பின் பிரபு நடிப்பில் வெளியான சின்னதம்பி ஜல்லிகட்டு காலை, பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட 15 படங்களுக்கு மேல் தயாரித்தார். இறுதியாக விஷால் நடிப்பில் புதிய படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருந்தார்.

 

அதற்கான முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு கொரொனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது கொரொனா சரியான நிலையில் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டது.

 

அதன் காரணமாக கேபி பிலிம்ஸ் பாலு நேற்று இரவு ஒரு மணிக்கு மரணமடைந்தார். இவர் சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon