மத்திய அரசுடன் விவசாயிகள் நாளை மறுநாள் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை..!
மத்திய அரசுடன் நாளை மறுநாள் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் சூழலில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் ஹரி..யானாவில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களை மூட போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மற்றும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஐந்து கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத சூழலில் அண்மையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது நான்கு பிரச்சினைகளில் இரு பிரச்சனைகளில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அடுத்த கட்டமாக நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தங்களது கோரிக்கையை ஏற்க மறுத்தால் ஹரியானாவில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், பெரிய வணிக நிறுவனங்களையும் மூடப் போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர். இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் விவசாயிகள் தரப்பில் எடுக்கப்பட்ட கோரிக்கைகளில் வெறும் 5% மட்டுமே விவாதிக்கப்பட்டு இருப்பதாகவும் வேளாண் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லி ஷாகின்பாக்கில் நடந்த போராட்டத்தின்போது தங்களது போராட்டத்தை மத்திய அரசு கருத வேண்டாம் என்றும் தங்களது போராட்டத்தை ஒதுக்கிவிட முடியாது என்றும் வேளாண் சங்க பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.






