--- --:--:-- --

குடியரசுத் தலைவரை சந்திக்க பேரணியாக சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது..!

1

த்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தரப்பட்டுள்ள இரண்டு கோடி கையொப்பங்களுடன் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கப் பேரணியாக சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கடுமையாக எதிர்த்து வரும் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி பேரிடம் கையொப்பம் பெற்று உள்ளது.

 

இந்த நிலையில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெறப்பட்டுள்ள 2 கோடி கையொப்பங்கள் உடன் குடியரசு தலைவரிடம் மனு அளித்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி சென்ற காங்கிரஸ் நிர்வாகிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

 

இதனையடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon