--- --:--:-- --

அவெஞ்சர்ஸ் குழுவுடன் சேர்ந்து நடிக்கப்போகும் நடிகர் தனுஷ்..!

3

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் ஹாலிவுட் திரில்லர் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் தனுஷ் ஏற்கனவே இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தற்போது மூன்றாவது பாலிவுட் படமான தி கிரே மேன் படத்தில் நடித்து வருகிறார்.

 

என்கேம் இயக்குனர்கள், ரூசோ பிரதர்ஸ் அந்தோணி மற்றும் ஜோவின் தி கிரே மேன் அடுத்த படமான இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ். ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ரியான் கோஸ்லிங் மற்றும் கிரீஸ் ஏவாண்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

 

மேலும் ஹேனடே ஹர்மாஸ், ஜெசிகா, வாங்கர் மௌரா மற்றும் ஜூலியா பட்டர்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். டெட்லைன் என்ற பிரபலமான ஹாலிவுட் செய்தி இணையதளம் இந்த தகவலை பகிர்ந்து உள்ளது. மேலும் நெட்ப்லிக்ஸ் தரப்பும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

 

திரில்லர் கதையான இந்த படத்தை நெட்ப்லிக்ஸ், ஓ‌டி‌டி தளம் தயாரிக்கிறது. இதுவரை நெட்ப்லிக்ஸ் தயாரித்துள்ள படங்களில் இதுதான் அதிகபட்ச பட்ஜெட் கொண்ட திரைப்படமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon