--- --:--:-- --

தரமற்ற கையுறை தயாரித்து 98 லட்சம் மோசடி.பெண் உட்பட இருவர் கைது !!!!

3.1

பெங்களூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவனம் தனியார் மருத்துவமனைகளுக்கும்,தொண்டு நிறுவனங்களுக்கும் பாதுகாப்பிற்காக கையுறை வழங்கி வந்தது.அதற்காக கோவை கவுண்டம்பாளையத்தில் இயங்கிவரும் புளு ஹர்ச்சிட்ஸ் நிறுவனத்திடம் கடந்த மே மாதம் ரூபாய் 98 லட்சத்திற்கு தவணை முறையில் கையுறை வாங்கியது.

 

அந்த நிறுவனம் தயாரித்த கை உறைகள் அனைத்தும் சேதமடைந்தது மற்றும் முன்பு உபயோகிக்கப்பட்ட கையுறை என்பதால் அந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரோஹித் புளு ஹர்ச்சிட்ஸ் நிறுவனத்தை நடத்திவரும் கீதா அகர்வாலிடம் தங்கள் நிறுவனம் அளித்த ரூபாய் 98 லட்சத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

 

அதற்கு எந்த பதிலும் அளிக்காத நிறுவனத் தலைவர் கீதா அகர்வால் மற்றும் அவரின் கூட்டாளி பாலாஜி என்பவர் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் ரோஹித் புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த உதவி ஆணையர் அப்பாதுரை கீதா அகர்வால் மற்றும் பாலாஜியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon