--- --:--:-- --

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற கணவன்..!

2

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே நடத்தையில் சந்தேகம் கொண்டு குடிபோதையில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர். கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த காளிதாஸ் – வீரம்மாள் தம்பதியின் 2 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தனர்.

 

போதைக்கு அடிமையான காளிதாஸ் நாள்தோறும் குடித்து விட்டு வந்து அவருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்ட காளிதாஸ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்டிக் கொன்று விட்டு தப்பி ஓடியுள்ளார்.

 

வீரம்மாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு காளிதாஸ் இந்த கொலையை நிகழ்த்தி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon