--- --:--:-- --

சித்ரா தற்கொலை குறித்து தீவிரமாக நடைபெறும் விசாரணை..!

1

ற்கொலை செய்து உயிரிழந்த சின்னத்திரை நடிகை சித்ரா உடன் நடித்த சக நடிகர்-நடிகைகள் நண்பர்களிடம் விசாரணை நடத்த கோட்டாட்சியர் முடிவு செய்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

 

சித்ராவின் தந்தை காமராஜ், தாயார் விஜயா, சகோதரி சரஸ்வதி, சகோதரர் சரவணன் ஆகியோர் உடன் கடந்த 14ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளார்.

 

தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து ஹேம்நாத் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது தந்தை ரவிச்சந்திரன், தாயார் வசந்தா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சித்ராவுடன் நடித்து வரும் சக நடிகர்கள் நடிகைகளிடம் விசாரணை நடத்த ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் முடிவு செய்துள்ளார்.

 

இதற்கான பட்டியலை சேகரிக்கும் பணி நடந்து வருவதாகவும் அதனை வைத்து அவர்க ளை நேரில் வரவழைத்து விசாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இதற்கிடையில் பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹேம்நாத்தை காவல்துறை பாதுகாப்போடு அழைத்து வந்து நாளை காலை 11 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் டிபிஎஸ்டி முன்பு ஆஜர்படுத்த உள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon