--- --:--:-- --

டெல்லியில் 13வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்..!

8

டெல்லியில் கடும் குளிரில் விவசாயிகளின் தொடர் போராட்டம் 13வது நாளை எட்டியுள்ள நிலையில் விவசாயிகளுடன் மத்திய அரசு நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லி போராட்டத்தை 13வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

 

லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பல மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லிக்கு தொடர்ந்து படையெடுத்து வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டம் காரணமாக தலைநகர் டெல்லி ஸ்தம்பித்துள்ளது.

 

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில் முடிந்து வருகின்றன. விவசாயிகளுடன் மத்திய அரசு இதுவரை நடத்திய ஐந்து கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளன.

 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நாளை ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

Leave a Reply

Right Menu Icon