கஜகஸ்தானில் பொம்மையை திருமணம் செய்த பாடி பில்டர்..!
இன்றைய காலகட்டத்தில் திருமணமாகாத இளைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு ஏன் ஆகவில்லை எதற்காக என்று அவர்களுக்கே தெரியவில்லை. ஆனால் சிலர் சிங்கிள்ஸ் என்று சொல்லி தங்கள் மனதை தேற்றிக்கொண்டு சமுதாயம் கேட்கும் கேள்விகளுக்கும் தயங்காமல் பதிலை கூறி கெத்தாக வாழ்ந்து கொண்டுள்ளனர் .
இப்படித்தான் திருமணம் செய்யாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் சிங்கிள்களுக்கு மத்தியில் வித்தியாசமான சில இளைஞர்களும் உள்ளனர். கஜகஷ்தானை சேர்ந்த பாடிபில்டர் ஒரு பொம்மையை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த பொம்மையுடன் தனிமையில் இருப்பதும் டேட்டிங் செல்வது என்று தன்னுடைய அனைத்து நேரத்தையும் பொம்மையுடன் செலவிட்டு வருகிறார். அந்த பொம்மைக்கு அறுவை சிகிச்சை நிபுணரை வைத்து மாற்று வடிவம் கொடுத்துள்ளார். கடைசியில் பொம்மை பெண் போல் மாற்றி நவம்பர் இறுதியில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் இந்த திருமணம் நடக்க பல மாதம் திட்டமிட்டுள்ளேன் என் காதலியே நான் மனதார விரும்புகிறேன் எனக்கு இனி எல்லாமே அவள்தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில்இப்படி ஒரு காதலா என்று பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் பலர் இந்தத் திருமணத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.






