--- --:--:-- --

திருப்பூர் 4-வது குடிநீர் திட்டம்: மேட்டுப்பாளையத்தில் இன்று கடையடைப்பு.புதிய குடிநீர் திட்டங்களை பவானிசாகர் நீர் தேக்கப்பகுதியில் செயல்படுத்த கோரிக்கை !!!

0.3

கோவை : திருப்பூர் 4-வது குடிநீர் திட்ட விவகாரத்தில் மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்புக் குழு சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை பகுதிகளில் ஏற்கனவே கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆற்றின் கரையோரம் இந்த பகுதிகள் அமைந்த போதும் கூட பல இடங்களில் பல நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. இந்த நிலையில், திருப்பூர் 4வது குடிநீர் திட்டம் என்ற பெயரில் ராட்சத குழாய்கள் மூலம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் துவக்கப்பகுதியில் இருந்தே தண்ணீர் எடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதே போல், கோவைக்கும் ஒரு புதிய குடிநீர் திட்டம் தொடங்க உள்ளது. இவ்வளவு பெரிய குழாய்களில் தண்ணீர் எடுக்கப்பட்டால் பவானி ஆற்றில் பல சமயங்களில் நீர்வரத்து முற்றிலுமாக தடைபட்டு போய்விடும் என மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்பு குழுவினர் தெரிவிக்கின்றனர்.

 

எனவே, ஏற்கனவே உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அமலில் உள்ள குடிநீர் திட்டங்களும் பாதிக்கப்படும். விவசாயமும் பாதிக்கப்படும் அபாய நிலை உள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விடும். அதுமட்டுமன்றி திருப்பூர், கோவை புதிய திட்டங்களுக்கும் போதிய நீரின்றி முழுமையான பலனைத் தராது எனவும்,குடிநீர் பாதுகாப்பு குழுவினர் தெரிவிக்கின்றனர்.

 

எனவே,எதிர்காலத்தில் அனைத்து மக்களுக்கும் ஏற்படும் பிரச்சனையை தவிர்க்க இனிமேல் செயல்படுத்த உள்ள திருப்பூர், கோவை மற்றும் புதிய குடிநீர் திட்டங்களை பவானிசாகர் நீர் தேக்கப்பகுதியில் செயல்படுத்த வேண்டும் எனவும், மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்கு விளாமரத்தூர் பகுதியில் இருந்து குடிநீர் வழங்க வேண்டும் என்று மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கூட்டத்தில் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று (டிச., 4) மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் முழு கடையடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து இன்று மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார காரமடை சிறுமுகை பகுதிகளில் குடிநீர் உரிமையை பாதுகாக்கவும், திருப்பூர் மற்றும் கோவை மக்களுக்கு எந்தக் காலத்திலும் தண்ணீர் கிடைக்கவும், கடையடைப்பு போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

 

அதனையடுத்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்தில் இன்று நடந்த இந்த கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சியினர் அமைப்புகள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இந்தக் கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்வது,திருப்பூர் 4ஆம் குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணிகளை உடனே நிறுத்தி விட்டு, இந்த திட்டத்திற்கான தண்ணீர் எடுக்கும் இடத்தை பவானிசாகர் நீர் தேக்கப்பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று இந்த கூட்டம் வலியுறுத்துவது, கோவை மூன்றாம் குடிநீர் திட்டத்திற்கான தொடக்கப்பணியான நில ஆர்ஜிதம் செய்யும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்று இந்த கூட்டம் கேட்டுக் கொள்வது, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் நீரோட்டத்தை கதவணை 1 மற்றும் 2 இல் முழுமையாக தடுத்து நிறுத்தாமல் உயிர் சூழலுக்கான குறைந்தபட்ச நீரோட்டம் (Minimum ecological flow) விநாடிக்கு 200 கன அடி நீர் திறக்க வேண்டி இந்த கூட்டம் கேட்டுக்கொள்வது,திருப்பூர் நான்காவது குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதிக்கும் பணிகளை மேட்டுப்பாளையம் நகர எல்லைக்குள் தொடங்கினால், அனைவரும் பங்கெடுத்து தடுத்து நிறுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon