பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றிதிரிந்த வெளிநாட்டு முதியவரை மீட்ட போலீசார்!
தர்மபுரியில் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் சுற்றித் திரிந்த முதியவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 70 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் நகர்ப்பகுதியில் சுற்றி வருவதாக பொதுமக்கள் தர்மபுரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
விசாரணையில் அவர் இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் என்பது தெரியவந்தது. 12 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் என்ற ஆண்டனி பெங்களூருவில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
மன நிறைவாகவும், சுற்றுலாவுக்காகவும் லாரி, கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் லிப்ட் கேட்டு பயணித்ததாக டேவிட் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். அவருக்கு உணவளித்த காவல்துறையினர் சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





