--- --:--:-- --

கடலாடியில் பா ஜ க மாநில மருத்துவரணி செயலாளர் மருத்துவர் ராம்குமார் புரவி புயலால் தங்கியிருக்கும் மக்களுக்கு பால் பிஸ்கட் வழங்கினார்

கடலாடியில் பா ஜ க மாநில மருத்துவரணி செயலாளர் மருத்துவர் ராம்குமார் புரவி புயலால் தங்கியிருக்கும் மக்களுக்கு பால் பிஸ்கட் வழங்கினார்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே புரெவி புயல் எதிரொலியாக சுனாமி கட்டிடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் மேலும் அங்கு தங்கி இருப்பவர்களுக்கு பா ஜ க மாநில மருத்துவரணி செயலாளர் மருத்துவர் ராம்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் சார்பில் பால்,பிஸ்ட் வழங்கினார்.புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதியில் வசிக்கும் மக்கள் பொதுமக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

 

இதன் ஒருபகுதியாக இராமநாதபுரமாவட்டம் கடலாடி அருகே உள்ள மூக்கையூர்,கன்னிராஜபுரம்,ரோச்மாநகர் பகுதியில் உள்ள சுனாமி கட்டிடத்தில் தங்கி உள்ளவர்களுக்கு பா ஜ க சார்பில் 76படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைப்பதற்கு ஜே சி பி இயந்திரம் மூலம் கருவேலமரங்கள் அகற்றப்பட்டது.

மேலும் பொதுமக்களுக்கு தேவையான பால்பாக்கெட், பிஸ்கட், வாழைப்பழம் , போர்வை, போன்றவை  பா ஜ க கடலாடி வடக்கு மாவட்ட கவுன்சிலர் செல்விராமபாண்டி சார்பில் அவரது மகனும் மாநில மருத்துவரணி செயலாளருமான மருத்துவர் ராம்குமார் வழங்கினார்.

 

இதில் ஒன்றிய தலைவர் சண்முகநாதன்,ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜசேகரபாண்டியன், ஒன்றிய இளைஞரணி தலைவர் பத்ரகாளிமுத்து, ஒன்றிய துணைத்தலைவர் மகாலிங்கம், வழக்கறிஞர்கள் சுரேஷ்,சிவராமகிருஷ்ணன்,கார்த்திக்சேதுபதி,அபிரமம் அய்யப்பன்,ஆகியோர் கலந்துகொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon