தாம்பரம் அரசு மருத்துவமனையில் மழைநீர் புகுந்துள்ளது..!
தாம்பரம் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவில் மழைநீர் புகுந்துள்ளது. நிவர் புயல் மகாபலிபுரம் காரைக்கால் இடையே கரையை கடந்தது.
கடந்த 3 நாட்களாக சென்னை புறநகர் பகுதியில் செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
இதைப்போல சென்னையை அடுத்த தாம்பரம் அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த புறநோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் இருக்கும் பகுதியில் மழை நீர் உட்புகுந்தது.
அனைத்து நோயாளிகளும் மருத்துவமனையை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் மழை நீரானது மருத்துவமனையில் குளம் போல் காட்சியளிக்கிறது.






