தமிழகத்தில் இன்று 1,688 பேருக்கு கொரோனா தொற்று ..! 2,173 பேர் டிஸ்சார்ஜ்…! 18 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் இன்று 1,688 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 1,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 66 ஆயிரத்து 677 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 13 ஆயிரத்து 404 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று தொற்று பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 173 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்து 705 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 568 ஆக அதிகரித்துள்ளது.







