--- --:--:-- --

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் நடிகர் விஜய், தனுஷ், சிம்புவின் மாஸ் படங்கள்..!

6

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏழு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்ததையடுத்து பொங்கலுக்கு நடிகர்கள் விஜய், தனுஷ், சிம்பு, சசிகுமார் உள்ளிட்டோர் நடித்த திரைப்படங்கள் ஒட்டுமொத்தமாக வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தயாரிப்பாளர் சங்கத்தினர் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிபிஎஃப் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதன்காரணமாக பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம், சசிகுமாரின் எம்ஜிஆர் மகன் திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon