கடலில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் உடல்கள் மீட்பு..!
சென்னை காசிமேடு கடற்கரைக்கு குளிக்க சென்று கடலில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த இரட்டையர்கள் உட்பட மூன்று சிறுவர்களும் இரண்டு சிறுமிகளும் தங்கள் அன்னையுடன் கடற்கரைக்கு சென்றனர்.
அப்போது ஐந்து பேரும் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.
சிறிது நேரத்திற்குப் பின்னர் அருள்ராஜ் என்ற சிறுவனின் உடல் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் மற்ற 4 பேரையும் தேடி வந்தனர் . 4 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சிறுமியை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றன.







