--- --:--:-- --

சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவராக பி.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப. , பதவியேற்றுக் கொண்டார்..!

6.1

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக புதிதாக பதவியேற்றுக் கொண்ட பி.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப. , ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பொறியியல் துறையில் பட்டப்படிப்பும், மற்றும் முதுகலையில் பட்டய படிப்பும் முடித்துள்ளார் .

 

மேலும் 2011 – ஆம் ஆண்டு I.A.S. தேர்ச்சி பெற்று வேலூர் மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக பணிபுரிந்தார் . அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சார் ஆட்சியராக பணிபுரிந்தார் . பின்னர் சென்னையில் வருவாய்த்துறையில் நில நிர்வாக இணை ஆணையராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார் .

 

தொடர்ந்து , பெருநகர சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்துறை இணை ஆணையராக பணியாற்றி வந்தார் . தற்பொழுது சிவகங்கை மாவட்டத்திற்கான புதிய ஆட்சித்தலைவராக இன்று 4.30 மணி அளவில் பதவியேற்றுள்ளார்.

 

இதுவரை சிவகங்கை ஆட்சியராக இருந்த ஜெயகாந்தன் மீன்வளத்துறை மேலாண் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon