--- --:--:-- --

தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தி சிம்லா சென்றுள்ளார் என எழுந்துள்ள விமர்சனம்..!

5

பீகார் மாநிலத்தில் மகா கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைத் தழுவிய நிலையில் அந்த கட்சியை கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் சிவானந்திவாரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

பிஹாரில் 70 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி இருந்த நிலையில் ராகுல் காந்தி மூன்று நாட்கள் மட்டுமே பரப்புரை செய்தார் என்றும், பிரியங்கா பரப்புரைக்கு வரவில்லை என்றும் சிவானந்திவாரி குற்றம்சாட்டினார்.

 

பரப்புரை தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது ராகுல் காந்தி சிம்லாவில் சுற்றுலா சென்று இருந்தார் என்றும், அவர் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறதே தவிர அதிக தொகுதிகளில் வெல்ல ஆர்வம் காட்டுவதில்லை என்றும் இந்நிலையில் பிஹாரில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் நிலவுவதாக குறிப்பிட்டார்.

 

இது போன்ற காரணங்கள்தான் பாஜகவுக்கு சாதகமாக முடிவதாகவும் சிவானந்திவாரி விமர்சித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon