சொத்து தகராறில் தம்பியின் மனைவியை தாக்கிய நபர்..!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சொத்து தகராறில் தம்பியின் மனைவியை போதையில் தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். நாவலூர் கிராமத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளான சுப்பிரமணியன், முருகன் இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது.
சனிக்கிழமை மாலை முருகன் வீட்டுக்கு போதையில் சென்ற சுப்ரமணியர் அவரை தாக்க முயன்றுள்ளார். அதனை தடுக்க வந்த முருகனின் மனைவி காவிரியை சுப்பிரமணியன் ஆவேசமாக தாக்கி கீழே தள்ளும் செல்போன் காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
இந்த காட்சிகளின் அடிப்படையிலும் காவிரி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனை போலீசார் தேடி வருகின்றனர்.






