--- --:--:-- --

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடைகளில் பிராணிகள் வதை தடுப்பு சட்ட நிர்வாகிகள் சோதனைகள் மேற்கொண்டனர்.!

1.1

தீபாவளி பண்டிகை பல்வேறு இடங்களிலும் கோலாகலமா வரவேற்கப்பட்டு வருகிறது. மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் என தென்மாவட்டங்களிலும் கூட்டம் அழைமோதுகிறது. கொரோனா காலகட்ட அசாதாரண சூழலில் விலகியது போல் மக்கள் நடமாடுகின்றனர்.

 

இதனால் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை நகரில் உள்ள இறைச்சிக் கடைகளில் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் நிர்வாக செயலாளர் திரு A. தனசேகர் அவர்களின் உத்தரவின் பேரில் தலைமை ஆய்வாளர் திரு கே . செல்வ தாஸ் அவர்களின் மேற்பார்வையில் பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின்படி மற்றும் களப்பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் விதிமீறல் உள்ள கடைகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தீபாவளி வருவதையொட்டி இறைச்சிக் கடையில் மக்கள் அதிகளவு திரண்டு இறைச்சி வாங்குவார்கள் என்பதால் அதிகாரிகள் இறைச்சிக்கடைகளை முன் கூட்டியே ஆய்வு செய்தது பாராட்டுக்குறியது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon