விருத்தாச்சலம் கிளை சிறை விசாரணை கைதி செல்வ முருகன் மரணம் குறித்த விசாரணை..!
விருத்தாச்சலம் கிளை சிறை விசாரணை கைதி செல்வ முருகன் மரணம் குறித்த விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணையம் புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வழிப்பறி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட செல்வமுருகன் திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். போலீசார் சித்திரவதை செய்ததால் தான் மரணமடைந்தார் என்று குடும்பத்தினர் குற்றம்சாட்டும் இந்நிலையில் இது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் கடிதம் அனுப்பியிருந்தார்.
விசாரணை நடத்திய மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





