--- --:--:-- --

டெய்ரி மில்க் சாக்லேட்டில் இருந்த பீடி துண்டு..!

10

திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகளுக்காக வாங்கப்பட்ட டெய்ரி மில்க் சாக்லேட்டில் பீடி துண்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடை ஒன்றில் கமல கண்ணன் என்பவர் குழந்தைக்கு டெய்ரி மில்க் சாக்லேட் வாங்கி உள்ளார்.

 

அதை பிரித்து குழந்தை கையில் கொடுக்கும் போது அதில் பீடி துண்டு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கடை ஊழியரிடம் கேட்டபோது தனக்கு ஒன்றும் தெரியாது என கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருமாறு உணவு பாதுகாப்பு துறைக்கு செல்போன் மூலம் புகார் அளித்தார்.

 

சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த கடையில் இருந்து அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon