கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி பட்டாசுகள் வெடித்து மேளதாளத்துடன் வரவேற்பு..!
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
கமலஹாசன் தனது 66வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சி அலுவலகத்திற்கு வந்த அவருக்கு பட்டாசுகள் வெடித்து மேளதாளத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
வாழ்த்துக் கூற வந்தவர்களுக்கு மரக்கன்று அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இதனிடையே குண்டூசி மற்றும் நூல் கொண்டு வரையப்பட்டிருந்த கமல்ஹாசனின் 10 அடி உயர ஓவியம் சிறப்பு கவனத்தை பெற்றது.






