--- --:--:-- --

விபத்தில் சிக்கிய கணவரை பார்க்க சென்ற மனைவி விபத்தில் உயிரிழப்பு..!

5

விபத்தில் சிக்கிய கணவரை பார்க்க சென்ற பெண் செவிலியர் சென்னையில் மாநகர பேருந்து மோதி உயிரிழந்தார். வேலூரை சேர்ந்த மரியம் என்பவர் மாதவரத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

 

இவரது கணவர் அப்துல் நேற்று வேலூரில் வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக அங்கு செல்ல மரியம் தனது இரு சக்கர வாகனத்தில் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

 

அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில் பின்னால் வந்த மாநகர பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். அந்த பகுதியில் விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்கக் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Right Menu Icon