நெல்லையில் இடி தாக்கியதில் காற்றாலை தீப்பிடித்து எரிந்தது..!
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இடி தாக்கியதில் காற்றாலை தீப்பிடித்து எரிந்தது. குமாரபுரம், ஆவரைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான காற்றாலைகள் நிறுவப்பட்டு மின்சார வினியோகம் செய்யப்படுகிறது.
நேற்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ததில் குமாரபுரத்தில் தனியார் காற்றாலை மீது இடி விழுந்ததில் வெளியீடுகளில் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.







