சென்னையில் பெண் அதிகாரியை மிரட்டிய மாநகராட்சி வாகன ஓட்டுநர் கைது..!
சென்னையில் பெண் அதிகாரியை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அழைத்து வந்து மிரட்டியதாக மாநகராட்சி ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
புதுப்பேட்டையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் துரைக்கண்ணு என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வந்த நிலையில் அவர் முறையாக பணிக்கு வரவில்லை என்று மாநகராட்சி உதவி பொறியாளர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த துரைக்கண்ணு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த செல்வம். வெங்கடேஷ் ஆகியோரை அழைத்து வந்து மிரட்டியதுடன் ஊழியர்களை தாக்கியதாக செல்லப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி ஓட்டுநர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.






