அமெரிக்க அதிபர் தேர்தலில் வெல்லப்போவது யார்..?
உலக நாடுகள் எதிர்நோக்கி காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் வாக்குப் பதிவு அமெரிக்க கனடா எல்லையான நியூஹாம்ஷையர் மற்றும் திக்ஸ்வில்லி என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் நள்ளிரவில் பதிவானது.
அதே மாநிலத்தில் உள்ள மில்ஸ்பீல்டு பகுதிகளில் டிரம்ப்புக்கு 16 வாக்குகளும், ஜோபைடனுக்கு 5 வாக்குகளும் கிடைத்தன. மேலும் சில பகுதிகளில் உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அமெரிக்க அதிபர் தேர்தலில் தபால் வழியில் சுமார் 10 கோடி பேர் வாக்களித்து விட்டனர்.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் பெரும்பாலான மாநிலங்களில் முன்னிலை வகிப்பதாக தேசிய தேர்தல் கணிப்புகள் தெரிவித்துள்ளன. அதை நேர முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய மாநிலங்களில் டிரம்ப்புக்கும், ஜோபைடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
தேர்தல் இன்று தொடங்கியதும் பெரும்பாலான மாநிலங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். முககவசம் அணிந்தவாறு வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். தேர்தல் முடிவுகளை வெள்ளை மாளிகையில் இருந்தவாறு அதிபர் டிரம்ப் கவனிக்க உள்ளார்.






