--- --:--:-- --

“டாஸ்மாக் கடை திறப்பு நேரம் இன்று முதல் மாற்றம்!!”பழைய மாதிரி நண்பகல் 12 To இரவு 10 மணி வரை செயல்படும்!!

20

மிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் மீண்டும் பழைய மாதிரி நண்பகல் 12 முதல் இரவு 10 மணி வரை என இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 25-ந் தேதி டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. ஒன்றரை மாதங்களுக்குப் பின் மே முதல் வாரம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டது. முதலில் நண்பகல் 12 மணி முதல் மாலை ஆறு மணி வரை எனவும், பின்னர் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை எனவும் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன.

 

இந்நிலையில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள், கொரோனாவுக்கு முன்னர் இருந்த மாதிரி நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon